நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையின் காரணமாக, பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு பாரிய வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அளவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தெதுருஓயா, தப்போவ, வெஹேரலகல, லுணுகம்வேஹேர, மவ்ஆர மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவில் பெய்த கடும் மழையினால், கெசெல்கமு ஓயா பெருக்கெடுத்ததில் பொகவந்தலாவின் தாழ்நிலப் பகுதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.