யுத்தநிறுத்தம் முடிவிற்கு வர தகர்க்கப்படவுள்ள சுரங்கங்கள் : இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு
யுத்தநிறுத்தம் முடிவிற்கு வந்தவுடன் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதைகள் பல இடிக்கப்படும் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில்,
பல சுரங்கப்பாதைகள் 'இடிக்கப்படும்
போர்நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பல சுரங்கப்பாதைகள் 'இடிக்கப்படும்' தகர்க்க இன்னும் பல இலக்குகள் மற்றும் பல சுரங்கங்கள் உள்ளன.
போர்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே இன்று ((வெள்ளிக்கிழமை)காலை கூட சிலவற்றை அழித்துள்ளோம் என்றார்.
பணய கைதிகள் பரிமாற்றம்
இதேவேளை இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நேற்று நடைமுறைக்கு வந்தது. முதற்கட்டமாக 13 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
صور نقل سيارات الصليب الأحمر للمحتجزين لدى #حماس
— العربية (@AlArabiya) November 24, 2023
#العربية pic.twitter.com/Poi8JgwisL
ஹமாஸ் விடுவித்த 13 பணய கைதிகளுக்கு ஈடாக 24 பெண்கள் உள்பட 39 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. இவர்கள் அனைவரும் இஸ்ரேல் வீரர்களை கொலை செய்யும் நோக்கில் தாக்கியது மற்றும் கல்வீச்சில் ஈடுபட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |