வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம் நாளை! அனைவரையும் பங்கேற்க அழைப்பு
இராணுவத்திடம் உறவுகளை கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம், என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (28) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு நாளை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது தினத்தையடுத்து நடைபெறவிருக்கும் போராட்டம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
போராட்டம்
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் “ சிலாவத்தை, விசுவமடு, மாங்குளம் ஆகிய இடங்களில் இருந்து காலை 6 மணிக்கு பேருந்துகள் புறப்பட உள்ளன. அத்தோடு குறித்த போராட்டமானது ஓ எம். பி அலுவலகத்திற்கு எதிரான போராட்டமாகும்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டமாக இருக்கும் என்பதோடு, தேசியத்திற்கு பயணிக்கும் அனைத்து உறவுகளையும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கேட்டு கொள்கிறோம்.
அத்துடன் போராட்டத்திற்கு வலிந்து காணமல் போனோர் சங்கத்தினால் அனைவரினதும் வருகையை எதிர்பார்க்கின்றோம்” என்றார்.