அமைச்சரின் மகனின் திருமணமா நாட்டை முடக்காதிருக்க காரணம்? சமுக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்
ajith nivard cabraal
travel restriction
son marriage
By Sumithiran
நாட்டில் கொரோனா தொற்று உக்கிரமடைந்துள்ளதுடன் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
எனினும் பொது முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்த நிலையில் அரசின் இந்த விடாப்பிடியான செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலவித விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில், நிதி முதலீட்டு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலின் மகனது திருமணம் விரைவில் நடைபெற்ற உள்ளது. நாட்டில் பொது முடக்கத்தை அரசாங்கம் அறிவிக்காமல் இருக்க இதுவே காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை அஜித் நிவார்ட் கப்ரால் முற்றாக நிராகரித்துள்ளார். இது தொடர்பான பதிவொன்றையும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி