கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் செவ்வாய் : அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியையும் வைத்து ராசிகளின் பலன்களை கணிக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் என்ன பலன் கிடைக்கப்போகின்றது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
அந்த வகையில் ஜோதிடத்தில், செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை ஆகியவற்றின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.
இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தன் இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மிதுன ராசியில் செவ்வாய் பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்தார்.
ராசிகளின் பலன்
ஏப்ரல் மாதத்தில் கடக ராசிக்குள் நுழைகிறார். இதன் மூலம் சில ராசிகள் அதிஷ்டத்தை தரப்போகின்றது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம் | இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இதன் காரணத்தால் நீங்கள் பல பெரும் நன்மைகளை பெறப்போகின்றீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல இருக்கும் கனவு இருந்தால் அது தற்போது நிறைவேறும். இந்த கால கட்டத்தில் நீங்கள் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். இதுவரை குடும்பத்துடன் நேரம் செலவிட கிடைக்கவில்லை எனின் இந்த காலகட்டம் சாதகமாய் அமையும். |
கன்னி | செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரத்தால் உங்கள் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஏதாவது முதலீடு செய்து இருந்தால் அதில் பல நன்மைகள் வந்து வேரும். வருமானம் அதிகரித்து நிதி நிலையில் உயர்ந்து செல்வீர்கள். இந்த பெயர்ச்சியின் பின்னர் பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டில் ஏதாவது ஒரு மங்கள நிகழ்வு உண்டாகலாம். |
தனுசு | செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். ஏப்ரல் மாதத்தில் இருந்து உங்களுக்கு சம்பளம் உயரும். இதன் பின்னர் பணத்தை முடிந்தவரை சேமிப்பீர்கள். அதே நேரத்தில், இன்னும் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில், எதிர்பார்த்த இடத்தில் வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எந்த முயற்ச்சியை கையாண்டாலும் அதில் வெற்றி கிடைப்பது நிச்சயம். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். |
[ இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 15 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
4 நாட்கள் முன்