யாழில் போர்க்காலக் கையெறி குண்டு மீட்பு!
யாழில் போர்க்காலக் கையெறி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மருதங்கேணி காவல் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இந்த வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த கையெறி குண்டை இன்று (08-06-2026) கண்டுபிடித்துள்ளனர்.
காவல்துறை உத்தியோகத்தர்கள்
இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 6:20 மணியளவில் நாகர்கோவில் கிழக்கு வனப்பகுதியில் உள்ள பனை மரமொன்றின் அடியில் இந்துக் கையெறி குண்டு இருப்பதைப் பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
இதையடுத்து, இது தொடர்பில் மருதங்கேணி காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி காவல்துறையினர், குண்டு இருக்கும் பகுதியை அடையாளப்படுத்தி அதன் பாதுகாப்பிற்காக இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களைப் பணியில் அமர்த்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பான அறிக்கை நாளை (09.06.2026) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பூ.லின்ரன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 23 மணி நேரம் முன்