முல்லைத்தீவில் ஏழு நாட்களாக காணாமல் போன வயோதிப தாய்
Sri Lanka Police
Missing Persons
Tamils
Mullaitivu
By Shalini Balachandran
முல்லைத்தீவில் வயோதிப தாயொருவர் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ளார்.
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த 84 வயதுடைய சலோசியாம்பிள்ளை மேரி புலோமினா என்ற வயோதிப தாயொருவரே இவ்வாறு காணாமல் போயியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (10.04.2025) முற்பகல் 09.30 மணியளவில் வீட்டை விட்டு குறித்த வயோதிப தாய் வெளியேரியுள்ளார்.
தேடும் பணி
இந்தநிலையில், வெளியேறியவரை தேடும் பணி ஏழு நாட்களாக தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது 0775570692, 0770253210 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு குடும்பஸ்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி