கோவில் அன்னதானம் ஒவ்வாமை: நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
Festival
Hinduism
Hatton
By Shalini Balachandran
மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியிலுள்ள லக்சபான தோட்ட ஆலயமொன்றின் திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் ஒவ்வாமை ஏற்படுத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(07) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வைத்தியசாலைக்கு அதிக நோயாளிகள் வருகை தந்ததன் காரணமாக அனைத்து வைத்தியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நோயாளிகள்
மேலும் நோயாளிகள் பலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதுடன் 28 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 12 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்