மன்னாரில் இராணுவம் அரங்கேற்றிய படுகொலைகள்! இன்றுடன் 38 ஆண்டுகள் பூர்த்தி
வரலாறு காலத்தால் ஆற்றமுடியாத துயரங்களை தன்னில் முற்றிலுமாக நிரப்பிக்கொண்ட சம்பவங்கள் பல பதிவாகியிருக்கிறது.
ஆனாலும் ஈழத்தமிழர்களின் வரலாறு என்று சொல்லப்படுவது 1956 ம் வருடங்களின் இடைப்பகுதிகளில் அம்பாறை மாவட்டத்தின் இங்கினியாகல பகுதியில் தொடங்கி 2009 முள்ளிவாய்க்காலில் முடிவுறுத்தபடும் வரை தமிழர் வரலாறு இரத்தம் தோய்ந்த பல படுகொலை வரலாறுகளை சுமந்து நிற்கிறது.
இந்த படுகொலைகள் அல்லது தமிழர்கள் மீதான சிங்களவர்களின் இனவெறி உயிர்ப்பறிப்புகள் தமிழர்கள் ஆயுதமேந்திப்போராடியதனாலோ அல்லது தனிநாடு கோரியமையினாலையோ நடாத்தப்படவில்லை
தமிழர்கள் வட்டுக்கோட்டையில் தனித்தமிழீழ பிரகடனம் என்கிற வட்டுக்கோட்டைத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சுமார் 20 வருடங்களுக்கு முன் குறிப்பாக இங்கினியாகல என்ற இடத்தில் இரும்புத்தொழிற்சாலை ஊழியர்கள் மீதான படுகொலையில் ஆரம்பமானது இந்த படுகொலை வரலாறு
அப்போது தமிழர்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தார்கள்
இப்படியாக சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாதிகளாலும் அரச ராணுவம் மற்றும் ஒட்டுக்குழுக்களினாலும் நிகழ்த்தப்பட்ட உயிர்ப்பறிப்புகள் வார்த்தை வரம்புகளால் சொல்லிவிட முடியாத வேதனைகளை உண்டு பண்ணி விடுகிறது எனலாம்.
இன்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன் அவ்வாறான ஒரு படுகொலையாகவே 1984 ம் ஆண்டின் மன்னார் படுகொலைகளும் பதிவாகின்றன.
மனித உயிர்கள் மகத்துவமானவை விலைமதிப்பற்றவை ஆனால் சிறிலங்காவை பொறுத்த வரை ஈழத்தமிழர்களின் வரலாற்றில் அவர்களின் உயிருக்கான மதிப்பு ஏதோ குறைவாகவே நோக்கப்பட்டது போன்ற ஓர் உணர்வை உண்டு பண்ணிய படுகொலையில் ஒன்றான 1984 ம் ஆண்டின் மன்னார் படுகொலைகளில் உயிர் பறிக்கப்பட்ட அத்தனை உறவுகளையும் இன்றைய நாளில் ஈழ்ழ்தமிழர்களின் வரலாற்று வலியை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் Ibc தமிழ் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
