யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
தொண்டைமானாறு கடல் நீர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி (Achchuveli) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜலிங்கம் சுபாஷினி எனும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று 12 காலை செல்வச்சன்னதி ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை தெரிவிக்கின்றார்.
மேலதிக விசாரணைகள்
தொண்டைமானாறு செல்வச்சன்னதி ஆலய கடல் நீர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புகைப்படங்கள் செய்திகளில் வெளி வந்திருந்தன.
இந்நிலையில், அவரது தந்தையார் தனது மகளை அடையாளம் கண்ட நிலையில் அச்சுவேலி காவல்துறையினர் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மீட்கப்பட்ட சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - தொண்டைமானாறு கடல்நீரேரியில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெண்ணின் சடலம் நேற்று (12.08.2025) செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்கள் மிதந்துகொண்டிருந்த சடலத்தை கண்டு காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கினர்.
காவல்துறையினர் விசாரணை
இதன் அடிப்படையில் அங்கு சென்ற அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியதுடன் சடலத்தையும் மீட்டுள்ளனர்.
எனினும் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான விவரங்கள் தெரியவரவில்லை.
இதேவேளை யாழ். மண்கும்பான் கடற்கரை பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கடந்த 11ஆம் திகதி மாலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
