இலங்கையின் அரசியலில் பாரிய சதி! குற்றம் சாட்டும் மொட்டு எம்.பி
இலங்கையின் (Sri Lanka) அரசியலில் பாரிய சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் தமது கட்சி கடந்த காலங்களில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், குறித்த நடவடிக்கைகளை தடை செய்யும் வகையில் அரசியல் சதிகள் முன்னெடுக்கப்பட்டதாக கலா வெவா பகுதியில் இன்று (26) இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் போது அவர் கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டங்களும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் இன்று ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, இன்று கலா வெவா பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கட்சித் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது உரையாற்றிய நாமல் ராஜபக்ச, தமது கட்சிக்கும் கட்சியின் திட்டங்களுக்கு எதிராகவும் பல சதித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |