தொலைபேசி வாங்கவிருப்போருக்கு நற்செய்தி: விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி,கையடக்க தொலைபேசிகளின் விலை 18% - 20% வரை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சி
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தற்போது டொலர் 300 ரூபா வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஐபோன் 15 pro max 515000 முதல் 530000 ரூபா வரை காணப்பட்ட விலை தற்போது 375000 ரூபா வரை குறைவடைந்துள்ளது.
விலை குறைப்பு
அதேபோல், குறைந்த விலையுடைய கைப்பேசிகளின் விலையும் 18 முதல் 20 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளதை காணக்கூடியதாய் உள்ளது.
10,000 ரூபா வரை அதிகரித்திருந்த கைப்பேசியை தற்போது 7000 ரூபாக்கு பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |