இலங்கைக்கு புவிநடுக்கம் வருவது சாத்தியமா...! வெளியான பகீர் தகவல்
இலங்கை புவிநடுக்கத்திற்குரிய வாய்ப்புக்களை கொண்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ புவிநடுக்கம் சார் நினைவுகளை எதிர்வு கூற முடியாது ஆனால், மண்சரிவு, சூறாவளி மற்றும் புயல் அனர்த்தங்களை போன்று என்றோ ஒருநாள் புவிநடுக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
உதாரணமாக கடந்த கால தரவுகளின் அடிப்படையில் கொழும்பில் துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்துள்ளன.
அத்தோடு, இதற்கான எழுத்து பூர்வமான வரலாற்று ஆவணங்கள் இருப்பதுடன் ஆய்வுக்கட்டுரைகளும் இது தொடர்பில் எடுத்துக்காட்டியுள்ளன.
இதனுடன் இலங்கைக்கு கீழாகவும், இலங்கைக்கு கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய சிறிய புவி நடுக்க நடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், என்றோ ஒரு நாள் இந்த அதிர்வுகள் பெரிய அனர்த்தமாக மாறலாம் ஆகவே இதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாட்டில் நிலவும் காலநிலை, நாட்டில் புயலின் தாக்கம் மற்றும் மக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |