யாழில் இரு குழுக்களுக்கிடையே வெடித்த வன்முறை: தீக்கிரையான பெறுமதியான சொத்துக்கள்
Jaffna
Fire
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் (Jaffna) சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரிய எரியூட்டல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த வன்முறை நேற்று இரவு (13.08.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, சேந்தான் குளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகளில் தீ மூட்டப்பட்டுள்ளது.
தீ விபத்து
இதன்போது சில வாடிகளும் எரிந்து நாசமாகியுள்ளது இதனையடுத்து, அப்பகுதி மக்களால் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளவாலை காவல்துறையினர்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 2 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்