கட்டுநாயக்காவில் விநோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தங்க கடத்தல் முயற்சி முறியடிப்பு
போலி வணிகப் பெயர்களைப் பயன்படுத்தி கூரியர் நிறுவனங்கள் மூலம் பெரிய அளவிலான தங்க கடத்தல் முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல பார்சல்களில் 16 கிலோ தங்கம் , வாகனங்கள் மற்றும் காபி தயாரிக்கும் இயந்திரங்களின் பாகங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடக செய்தி தொடர்பாளர், சுங்கத்துறை துணைப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
கடத்தல்காரர்கள் பொருட்களின் உட்புற பாகங்களை தங்கத்தில் தயாரித்து பொருட்களை இணைத்து சுங்கத்தை தவறாக வழிநடத்த முயன்றுள்ளனர்.
இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ. 220 மில்லியனை நெருங்குவதாக சுங்க ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
அதன்படி, சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மேலதிக விசாரணைகள் சுங்க போதைப்பொருள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.