எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பாரிய இரும்பு மிதவை
கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீப்பற்றியெரிந்து மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் இருந்து பாரிய இரும்பு மிதவை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த மிதவை நேற்றுகாலை மொரகல்ல கடற்கரையில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மீனவர்கள் நேற்று மதியம் கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் ஒரு பெரிய இரும்புத் துண்டு மிதப்பதைக் கண்டனர், நேற்று காலையளவில் அது மொரகல்லே கோல்ட் பீஜ் கடற்கரைக்கு அருகில் மிதந்து கொண்டிருந்தது.
அதன்படி, அலுத்கம மீன்வள திணைக்கள மேற்பார்வையாளரின் மேற்பார்வையில், அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன், ஒரு படகு மற்றும் கயிறுகள் கொண்டு அதனை ஏற்றி மொரகல்லவில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலின் பின்னால் விடப்பட்டுள்ளது.
சுமார் 7 அடி உயரமும் கிட்டத்தட்ட 250 கிலோகிராம் எடையும் கொண்ட இரும்பு மிதவை சோதனைக்கு ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாராவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.