கற்பிட்டியில் கரைஒதுங்கிய பாரிய திமிங்கலம்
Puttalam
By Sumithiran
புத்தளம் கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளமுடைய திமிங்கலம் ஒன்று இன்று காலை உயிருடன் கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு கரையொதுங்கிய திமிங்கலத்தைக் கண்ட மீனவர்கள் கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன்

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினரின் உதவியுடன் குறித்த திமிங்கலத்தை ஆழமான பகுதியில் விட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த திமிங்கலம் Bryce's Whale இனத்தைச் சார்ந்தது என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்