ஸ்ரீலங்காவில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்!
corona
sri lanka
quarantine
kurunagala
By Kalaimathy
மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் என்பன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை குருணாகல் மாவட்டத்தில் பன்னல காவல்துறை அதிகார பிரதேசம் மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ காவல்துறை அதிகார பிரிவின் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்