யாழில் துப்பாக்கி முனையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
யாழ். தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் பலத்த எதிர்ப்பின் மத்தியில் மாவீரர்களுக்கான சுடரேற்றி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் துயிலுமில்ல வளாகத்தில் செல்ல விடாது தடுத்து நிறுத்தியிருந்தனர்.
அதன்போது சட்டத்தரணி உள்ளிட்ட குழுவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பலத்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அதன் பின்னர் அவ்விடத்தில் தரையில் இருந்து சத்தியாக்கிரகத்தை மேற்கொண்ட சட்டத்தரணி உட்பட்ட குழுவினர், எதிரே ஆயதம் தாங்கிய இராணுத்தினர் இருந்த போதும், அமைதியான முறையில் நினைவுச் சுடரேற்றி இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் பிரதேச மக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மாவீரர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.


