யாழ். நல்லூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர்நாள் நினைவேந்தல்!
By Kajinthan
மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27.11.2025) நல்லூரடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (27.11.2025) மாலை 06.05 க்கு மணி ஒலிக்க, 06.06 க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு துயிலும் இல்ல கீதம் ஒலிக்கப்பட்டது.
இதன்போது மண்ணின் விடுதலைக்காக வித்தாகியோரது பெற்றோரும், உரித்துடையோரும் கண்ணீர் விட்டு அழுததை அவதானிக்க முடிந்தது.
நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுகளையும் மக்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்