கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மன்னாரில் மாவீரர் தின நினைவேந்தல் ( படங்கள்)
By Vanan
மன்னாரில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் சுடர் ஏற்றி தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தப்பட்டது.
இன்று காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் தினத்தினை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுருந்த நிலையிலும், தமிழர் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி இடம்பெற்றது.
இதன் போது மன்னார் நகர சபைத் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார், மன்னார் நகரசபை உறுப்பினர் ரெட்னசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்