யாழில் நடைபெற்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் மே தினக் கூட்டம்
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் மே தினக்கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ். இணுவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த மே தினக்கூட்டம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய ஐந்து தமிழ் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த மே தின நிகழ்வை முன்னெடுத்துள்ளன..
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டோர்
குறித்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

மேலும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன், ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினர் வேந்தன், கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |