1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை

Sonnalum Kuttram
By Bavan Oct 04, 2026 08:35 PM GMT
Report

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் 1,500 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களது உரிமைப் போராட்டம் பல்வேறு தரப்பினராலும் கையாளப்பட்டு, நியாயமான கோரிக்கைகள் மலினப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷினால் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பண்ணையாளர்கள் இன்று வரை எந்தவொரு நிரந்தரத் தீர்வும் இன்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவிலும் திபுலபொத்தானை என்ற பெயரில் கிராமம் எதுவும் இல்லை.

எனினும், தற்போது பெரியமாதவனைப் பகுதி திபுலபொத்தானை என அழைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு - மாதவனை பகுதிகள் தற்போது சேனைப் பயிர்ச்செய்கைக்காக ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவற்றை மேய்ச்சலுக்கு விடாமல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘நல்லிணக்கம்’ என்ற பெயரில் இரு தரப்பினரையும் ஒரே மேய்ச்சல் நிலத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது, பண்ணையாளர்களை அப்பகுதியிலிருந்து படிப்படியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கையாக அமையக்கூடும்.

இந்த நிலை தொடருமானால், எதிர்காலத்தில் கால்நடை வளம் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பண்ணையாளர்களின் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தமது சுயநல நோக்கங்களுக்காக சிலர் செயற்பட்டுள்ளதாகவும் தர்மலிங்கம் சுரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே, மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் கால்நடை வளத்தையும் பாதுகாக்கும் வகையில் நிரந்தரமானதும் நியாயமானதுமான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை | Mayilathamadu Madhavanai Protast

1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை | Mayilathamadu Madhavanai Protast

1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை | Mayilathamadu Madhavanai Protast

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் கருணாவின் தொடர்பு...! உண்மைகளை உடைத்த நேரடி சாட்சி

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் கருணாவின் தொடர்பு...! உண்மைகளை உடைத்த நேரடி சாட்சி

சட்டவிரோத விகாரைக்குள் சட்டவிரோத கட்டிடங்கள்: தையிட்டியில் புதிய சர்ச்சை

சட்டவிரோத விகாரைக்குள் சட்டவிரோத கட்டிடங்கள்: தையிட்டியில் புதிய சர்ச்சை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022