போராட்டம் திரைப்பட ஒளிப்பதிவாளருக்கு பெரும் வரவேற்பு...!
போராட்டம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கமலின் பங்களிப்பிற்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் தாயகத்தின் பல்வேறு கோலங்கள், உணர்வுகள், வலிகள், மகிழ்ச்சிகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மிக நுட்பமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுவிஸ்பிரபா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில்,கமலின் ஆரம்பகால ஊடகப் பயணம் TTN தொலைக்காட்சி நிறுவனத்தில் தங்களோடு இணைந்து தொடங்கிய காலத்திலிருந்தே அவரைத் தாம் நன்கு அறிவேன் என நினைவு கூர்ந்துள்ளார்.
அன்று விதைக்கப்பட்ட சிறிய விதை இன்று ஒரு பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் கதையைப் பதிவு செய்வது என்பது வெறும் காட்சிகளைப் பதிவு செய்வதல்ல, அந்த மண்ணின் வலிகளையும் போராட்டங்களையும் உணர்ந்து கலை வடிவமாக வெளிப்படுத்துவது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |