அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க
உலக சந்தையில் நிலவும் விலைகளுடன் ஒப்பிடுகையில், நாட்டில் எரிபொருள் விலைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.மேலும், மின்சார சபைக்கு ஒரு லிட்டர் எரிபொருளை ரூ. 210-க்கு விற்பனை செய்வதன் மூலம் ஈட்டப்படும் அதிக லாபம் குறித்து அரசாங்கம் பொதுமக்களுக்கு ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் சுட்டிக்காட்டுவது போல, உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைகளும், நாட்டில் உள்ள விலைகளும் பின்வருமாறு உள்ளன.
ஒக்டேன் பெட்ரோல் 92: இறக்குமதி விலை: ரூ. 292 இலங்கை விலை: ரூ. 414
ஒக்டேன் பெட்ரோல் 95: இறக்குமதி விலை: ரூ. 305 இலங்கை விலை: ரூ. 475
ஓட்டோ டீசல்: இறக்குமதி விலை: ரூ. 350 இலங்கை விலை: ரூ. 392
சூப்பர் டீசல்: இறக்குமதி விலை: ரூ. 367 இலங்கை விலை: ரூ. 528
எரிபொருள் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், எரிபொருள் விலை சூத்திரம் உடனடியாக நாட்டுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |