ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் கருணாவின் தொடர்பு...! உண்மைகளை உடைத்த நேரடி சாட்சி
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் கருணாவிற்கு நேரடி தொடர்பிருப்பதாக தான் கருதவில்லை என சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ய சென்ற குழுவில் 2 பேர்தான் கருணாகுழுவைச் சேர்ந்தவர்கள், மற்றையவர்கள் ஏனைய குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில் கருணா குழு என்ற பெயர் அங்கு அவர்களுக்கு தேவைப்பட்டது, காரணம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்துவதில் மற்றும் தாயக கோட்பாட்டை பலவீனப்படுத்துவதில் இந்த செயற்பாடுகள் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி இருந்தது” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் முன்வைக்கப்படும் தகவல்கள், EPRLF சாந்தன் - கருணா தொடர்பாக கூறப்படும் பின்னணிகள், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அக்காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |