மே மாதத்தில் காத்திருக்கும் பேரழிவு: மக்களுக்கு பேரிடி தகவல்..!
சமூக ஊடகத்தில் டைம் ட்ராவலர் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ள எனோ அலரிக் என்பவர் எதிர்காலத்தில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று மிக முக்கிய நிகழ்வொன்று நடைபெறும் எனவும் பாதுகாப்பாக, எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கடந்த காலங்களில் இவர் பல எச்சரிக்கைகளை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த மாதம் ஒரு பேரழிவு நடக்கப்போவதாக எனோ அலரிக் (Eno Alaric) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
750 அடி உயர சுனாமி
இதற்கமைய மே மாதம் 15ஆம் திகதி, அமெரிக்காவின் மேற்குக் கரை பகுதியை குறிப்பாக சான் பிரான்சிஸ்கோவை, 750 அடி உயர சுனாமி ஒன்று தாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சுனாமியின் விளைவாக, பல நூறு பில்லியன் அளவுக்கு சேதம் ஏற்படும் என்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு விடைகொடுக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவரின் எதிர்வுகூறல்களை சிலர் நம்புவதாக கருத்து தெரிவிக்கும் அதேவேளை வேறு சிலர் இவரது தகவல்கள் நகைப்பிற்குரியவை எனவும் திரைப்படங்கள் பார்த்து மூளை மழுங்கிவிட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
