இலங்கையில் அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் -கறுப்பு ஜூலை தின செய்தியில் கனடா பிரதமர்

srilanka canada black july
By Sumithiran Jul 23, 2021 07:00 PM GMT
Report

1983 ஜுலை மாதம் நீண்டகால பதற்றமும் அமைதியின்மையும் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இறுதியில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக மாறியது.

எனவே இலங்கையில் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று நாங்கள் கனடாவை சேர்ந்த தமிழர்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் உள்ள தமிழ் சமூகத்தினருடன் இணைந்து இலங்கையின் பயங்கரமான கறுப்பு ஜுலை சம்பவங்களை நினைகூருகின்றோம்.

1983 ஜுலை மாதம் நீண்டகால பதற்றமும் அமைதியின்மையும் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இறுதியில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக மாறியது. –பின்னர் நாட்டை 26 வருட ஆயுதமோதலுக்குள் தள்ளியது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதமோதல் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்றது. பலரை நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது,நாட்டின் சமூகத்தினர் மத்தியில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலைக்கு பிந்தைய மாதங்களில் கனடாவை சேர்ந்த தமிழர்களின பரப்புரை காரணமாக கனடா அரசாங்கம் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

இலங்கையிலிருந்து 1800 தமிழர்கள் கனடாவில் குடியேறுவதற்கும் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக கட்டியெழுப்புவதற்கும் உதவியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கனடா தமிழர்கள் புலம்பெயர் சமூகத்தின் பெரும்பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். மேலும் அவர்கள் வலுவான அனைவரையும் உள்ளடக்கிய கனடாவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா அரசாங்கத்தின் சார்பில் கறுப்பு ஜூலையின் போதும் அதன் பின்னரும் துயரங்களை அனுபவித்தவர்களுக்கும் உறவுகளை இழந்தவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆயுதமோதல் 2009 இல் முடிவிற்கு வந்தது. எனினும் நாட்டில் உள்ள அனைவருக்கும் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் பாடுபடவேண்டும்,இதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம்.இந்த இலக்கை நோக்கி பாடுபடும் அனைவருக்கும் கனடா தனது ஆதரவை வழங்குகின்றது என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015