கடுமையான தட்டம்மை நோய் பரவல்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

By Pavi Sep 17, 2026 08:26 AM GMT
Report

பங்களாதேஷில் வேகமாகப் பரவி வரும் கடுமையான தட்டம்மை தொற்று காரணமாக இதுவரை 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 194,000க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் உலகிலேயே அதிகளவான தட்டம்மை நோயாளர்கள் பதிவாகிய நாடாக பங்களாதேஷ் மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 19.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாளொன்றுக்கு சுமார் 1,000 புதிய சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

 தடுப்பூசி வழங்கும் திட்டம்

அதிக மக்கள் தொகை, கொவிட்-19 காலப்பகுதியில் தடுப்பூசி வழங்கும் திட்டங்களில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஷேக் ஹசீனா அரசாங்கம் பதவி விலகிய பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகியவை இந்த நிலைமை மேலும் மோசமடைய காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தட்டம்மை நோய் பரவல்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு | Measles Outbreak Over 1000 Children Lose Lives

பதிவாகியுள்ள நோயாளர்களில் 83 சதவீதமானோர் தடுப்பூசி பெறாத குழந்தைகள் எனவும், குழந்தைகளிடையே நிலவும் அதிகளவான ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக நோயின் சிக்கல்கள் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைகளின் கொள்ளளவை விட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு தரையில் பாய்களை விரித்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடுப்பூசி பெறாத குழந்தைகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி விசேட தீவிர தடுப்பூசி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பங்களாதேஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தட்டம்மை ஒழிப்பு பாதையில் முன்னேறி வந்த பங்களாதேஷ் தற்போது இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அண்மைக் காலமாக தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடுமையான விதிகள்

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடுமையான விதிகள்

காவல்துறை நற்சான்றிதழ் பெற புதிய இலக்கங்கள்! வெளியான அறிவிப்பு

காவல்துறை நற்சான்றிதழ் பெற புதிய இலக்கங்கள்! வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016