மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடக தணிக்கை! மாவட்ட அரசாங்க அதிபரினால் நடைமுறை

Batticaloa Sri Lankan Peoples
By Dilakshan Feb 12, 2024 04:06 PM GMT
Report

மட்டக்களப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஊடக தணிக்கையினை மாவட்ட அரசாங்க அதிபர் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஊடகவியலாளர்களுக்கு கடிதம் மூல மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் ஊடகவியலாளர்களுடன் இன்று நடைபெற்ற கூட்டத்தின் பிரகாரம் ஊடகவியலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் நிலத்தை அபகரிக்க முயற்சி: மக்கள் போராட்டத்தால் முறியடிப்பு

யாழில் நிலத்தை அபகரிக்க முயற்சி: மக்கள் போராட்டத்தால் முறியடிப்பு


விமர்சனம்

ஆனால் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களின் கூட்டத்திற்கு பல ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதோடு, ஊடகவியலாளர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் செய்தி சேகரிப்பது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடாக அமையம் கோரிக்கை விடுத்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடக தணிக்கை! மாவட்ட அரசாங்க அதிபரினால் நடைமுறை | Media Censorship In Batticaloa

இந்நிலையில், இன்று அவற்றையெல்லாம் புறந்தள்ளி நான்கு ஊடகவியலாளர்களை அழைத்து கூட்டம் நடாத்திவிட்டு அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை அபிவிருத்தி குழு கூட்டத்தில் நடைபெறும் செய்திகளை மாவட்ட தகவல் திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுவரை இருந்த எந்த அரசாங்க அதிபரும் செய்யாத வேலையை தற்போது புதிதாக வந்த அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளமை ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊடகவியலாளர்களின் கேள்வி

அரச அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு வகையாக செய்திகளை வெளியிடும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி தொடங்கி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் ஊழல் நடைபெற்று பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படும் நிலையில் மாவட்ட தகவல் திணைகள அதிகாரிகள் தரும் செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு உண்மைகளை வெளியிட முடியும் என்ற கேள்வி எழுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடக தணிக்கை! மாவட்ட அரசாங்க அதிபரினால் நடைமுறை | Media Censorship In Batticaloa

ஒரு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நான்கு தூண்களில் நான்காவது தூணை வெட்டிவிட முயற்சிப்பது ஏன் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஊழல் அற்ற வெளிப்படைத் தன்மையுடன் ஒரு மாவட்ட நிர்வாகம் செயற்படுமாக இருந்தால் ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் கண்டு பயப்பட வேண்டிய தேவை இருக்காது.

ஊடாக சுதந்திரத்தையும், தகவல் அறியும் சுதந்திரத்தையும் மீறி தாங்கள் தரும் செய்தியை தான் ஊடகவியலாளர்கள் போடவேண்டும் என்பது ஊடகத் தணிக்கைக்கு சமமான செயற்படாகும், இது ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை சட்டங்களை மீறுவதாக அமைகிறது? மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடக தணிக்கை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது? 

தமிழர் பகுதியில் நடந்த சோகம்: தவறான முடிவெடுத்த சிறுமி

தமிழர் பகுதியில் நடந்த சோகம்: தவறான முடிவெடுத்த சிறுமி

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025