மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என விமர்சித்த ஹேரத்- வருந்திய கெஹெலிய!
ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ‘மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் கெஹெலிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் அண்மையில், ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது கடந்த காலத்தில் கொல்லப்பட்ட சில ஊடகவியலாளர்கள் மூன்றாம் வகுப்பு ஊடகவியலாளர்கள் என விமர்சித்திருந்தார்.
இதேவேளை ஹேமந்த ஹேரத் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடக உரிமைகள் குழுக்கள் கோரியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இதற்கு விளக்கமளிக்கும் வகையிலேயே ஊடக அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஹேரதின் கருத்துக்கள் தங்களைக் குறிப்பதாக ஊடகவியலாளர்கள் தங்களைத் தாங்களே எடுத்துக்கொண்டால், அது தொடர்பில் தான் வருந்துகிறேன் என்றும் எந்தவொரு உறுப்பினரும் மூன்றாம் வகுப்பு என்று அழைக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.