பிமலின் ஊடக செயலாளர் பதவி விலகல்! அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலி
Sri Lankan Peoples
Bimal Rathnayake
NPP Government
By Dilakshan
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சின் ஊடக செயலாளர் சுரங்க லக்மல் செனவிரத்ன பதவி விலகியுள்ளார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாததால் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பறிக்கப்பட்ட அமைச்சுப் பதவி
சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பில், அமைச்சர் பிமல் தனது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பதவி விலகல் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், குறித்த பதவிகள் அனுர கருணாதிலகவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அவரைத் தவிர, ஏனைய அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்த பல அதிகாரிகள் சமீபத்திய காலங்களில் பதவி விலகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்