ஈஸ்டர் தாக்குதலில் முக்கிய அரசியல்வாதிக்கு வலைவீச்சு! கசிந்தது தகவல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாட்களுக்குள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இந்த அரசியல்வாதி கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
கிளம்பியுள்ள சர்ச்சை
இவ்வாறானதொரு பின்னணியல், இந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன கூறியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வெளியிட்டிருந்த நிலையில், இது முற்றிலும் போலியான அறிக்கை என்று அரசாங்கமும் காவல்துறையினரும் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, இந்த செய்தியை வெளியிட்டவர் மீதும் பரப்பியவர்கள் மீதும் கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கத் தரப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[FZGCTLH
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
