சோடி உறுப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை - வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 இதயங்களுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பீகார் மாநிலம், சாப் ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்த பிரசுதா பிரியா தேவி என்ற பெண்ணிற்கே குறித்த குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன.
வைத்தியசாலை முன்பு பரபரப்பு
இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை வைத்தியர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர்.
என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த வைத்தியசாலை முன்பு ஏராளமானோர் திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் குழந்தை இறந்த தகவலை வைத்தியர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
