வெளிநாடொன்றில் கோர விபத்துக்குள்ளான விமானம் - பலர் பலி
வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance) சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளான சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம்
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நான்கு பேர் (பைலட், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட) மற்றும் தரையில் இருந்த இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்ததாக கென்யா சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 1 மணி நேரம் முன்
