வைத்திய சேவை ஒன்றியம் நாளை மறுநாள் முதல் பணிப்புறக்கணிப்பில்!
Srilanka
strike
Health Ministry
Ravi Kumudesh
Medical Services Union
By MKkamshan
ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (07) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னதாகவே அறிந்திருந்தும், அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இன்னும் எடுக்காதிருப்பதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்துள்ளார்.
இதனால் நாளை மறுதினம் முற்பகல் முதல் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
