கோர விபத்து - மருத்துவ பீட மாணவன் பரிதாபமாக பலி

Sri Lanka Police Eastern University of Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Thulsi Nov 25, 2025 01:23 AM GMT
Report

மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - வந்தாறுமூலைப் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி உயிரிழப்பு!

யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி உயிரிழப்பு!

விபத்துச் சம்பவம்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மேற்படி மாணவன் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஓட்டமாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரம் திடீரென வலது புறத்து உள்வீதிக்கு மாறிய வேளை அதனுடன்  மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

கோர விபத்து - மருத்துவ பீட மாணவன் பரிதாபமாக பலி | Medical Students Killed In Road Accident

இதன்போது உழவு இயந்திரத்துக்கும் இழுவைப் பெட்டிக்கும் இடையில் மோட்டார் சைக்கிள் சிக்கியுள்ளது.

தலையில் பாரிய காயம் ஏற்பட்டு இரத்தப் பெருக்கினால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய வைத்தியர் கைது!

பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய வைத்தியர் கைது!

திடீர் மரண விசாரணை 

உழவு இயந்திரத்தின் சாரதி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோர விபத்து - மருத்துவ பீட மாணவன் பரிதாபமாக பலி | Medical Students Killed In Road Accident

உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் விசாரணையை மேற்கொண்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது         

கனடாவில் நிரந்தர குடியுரிமை: வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் நிரந்தர குடியுரிமை: வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

     

ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026