கனடாவில் நிரந்தர குடியுரிமை: வெளியான மகிழ்ச்சி தகவல்
கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியாக Bill C-3 எனும் மசோதாவை முன்வைத்துள்ளது.
இதன் மூலம் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் உட்பட பலர் பயன் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Bill C-3 நீண்டகாலமாக நிலவிய குடியுரிமை பிரச்சினைகளை சரிசெய்கின்றது என கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு
வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான குடும்பங்களுக்கு இது நியாயத்தை வழங்கும் எனவும் முன்னைய சட்டங்களால் நீக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை மீண்டும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் தலைமுறை வரையறை First-generation limit எனும் விதியில் கனடாவில் பிறந்தோ அல்லது குடியுரிமை பெற்றோர்களில் ஒருவருக்கு மட்டுமே வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கும் போது செல்லுபடியானதாக இருந்தது.

இந்தநிலையில், 2023 டிசம்பரில் ஒன்டாரியோ உச்ச நீதிமன்றம் இந்த விதி அரசியலமைப்புக்கு முரண்பட்டது என தீர்ப்பளித்தது
கூட்டாட்சி அரசு இதை ஏற்று, மேல்முறையீடு செய்யாமல் விட்ட நிலையில் இந்த கட்டுப்பாட்டின் காரணமாக தங்களை Lost Canadians என அழைத்துக் கொண்ட ஒரு பெரிய குழு, தங்களுக்கு உரிய குடியுரிமையைப் பெற முடியாமல் இருந்தனர்.
குடியுரிமை
இந்தநிலையில், தற்போது பில் சீ 3 மூலம் முன்பு குடியுரிமை இழந்த அல்லது பெற முடியாதவர்களுக்கு குடியுரிமை மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, வெளிநாட்டில் பிறந்த கனடிய பெற்றோருக்கு அவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனப்படையில், அந்த பெற்றோர் குழந்தை பிறப்பதற்கு முன் அல்லது தத்தெடுப்பதற்கு முன் 1,095 நாட்கள் (மொத்தம் மூன்று ஆண்டுகள்) கனடாவில் வசித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் நடைமுறையுடனும் இது இணங்குகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தவுடன் குடியுரிமை விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரிக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |