சடலங்களை ஆயுதமாக்கும் இஸ்ரேலின் எதிரிகள்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரின் போது காசா எல்லைக்குள் உட்புகுந்த ஹமாஸ் அமைப்பினர் அங்கு வாழ்ந்த மக்களை கொலை செய்திருக்கின்றனர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர், ஈவிரக்கமற்ற படுகொலைகளை செய்திருக்கின்றனர், உயிருடன் சிலரை பிடித்து சென்றிருக்கின்றனர்.
இவற்றைக் கடந்து ஹமாஸ் அமைப்பினர் அங்கு ஒரு முக்கியமான செயலைச் செய்திருக்கின்றனர். அதாவது இறந்தவர்களின் உடல்களை கவர்ந்து சென்றுள்ளனர்.
இவ்வாறு கவர்ந்து செல்லப்பட்ட உடல்களை மீட்பதற்காக இஸ்ரேலியப் படையினர் ஏராளமான தங்களுடைய வீரர்களைப் பலிகொடுத்து அந்த உடல்களை மீட்பதற்கான முயற்சிகளைச் செய்திருக்கின்றார்கள்.
யூதர்களைப் பொறுத்தவரை இறந்தவர்களுடைய உடல் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது, எதற்காக அந்த உடல்களை மீட்பதற்கு மிகுந்த முயற்சிகளை எடுத்திருக்கின்றார்கள், அந்த உடல்களை விட அதிகமான உயிர்களை பலிகொடுத்து ஏன் அந்த உடல்களை மீட்டு வந்திருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கான பதில்களை இஸ்ரேல் களத்திலிருந்து ஆய்வு செய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம்.......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |