காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நீதியமைச்சர் இடையே முக்கிய சந்திப்பு
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுடனான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் கவலைகளை நேரடியாகக் கேட்டறிந்தார்.
பல ஆண்டுகளாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில்களை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் இதன்போது பகிரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உண்மை கண்டறிதல்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, உண்மை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கும், யாழ்.மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(20)இடம் பெற்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




