இலங்கை கடும் நெருக்கடியில் -ரணிலை திடீரென சந்தித்த அமெரிக்க தூதுவர்
srilanka
colombo
meet
ranil
us-ambassador
By Sumithiran
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இன்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் ஐ.தே.க தலைவரின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு சாத்தியமான கூட்டு நடவடிக்கைகள் குறித்து விக்கிரமசிங்கவுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக அமெரிக்க தூதுவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வலுவான எதிர்க்கட்சி தேவை எனவும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி