தமிழரசுக் கட்சியின் சர்வதேச சந்திப்புக்களில் கலந்துகொள்ளும் புதிய முகம்!! அதிர்ச்சியில் வாடிய பழைய முகம்!!
தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னொரு காலத்தில் ஏதாவது சர்வதேச சந்திப்புக்கள் மேற்கொள்வதாயின் ஒரே ஒரு நபர் மாத்திரம்தான் 'முந்திரிக்கொட்டை' போல துள்ளிக் குதித்துக்கொண்டு போய் அந்தச் சந்திப்புக்களை மேற்கொள்வது வளக்கம்.
கூட யாரையும் அழைத்துச்செல்லவும் மாட்டார்... என்ன பேசினார் எண்டு யாரிடமும் சொல்வும் மாட்டார்.
எங்கட சனமும், தமிழ் இனத்திலேயே ஆங்கிலம் பேசத் தெரிந்த ஒரே ஒருவர் அவர்தான் என்பது போலவும், சர்வதேச சட்டங்களுக்குள் நீந்திச் சுழியோடி தமிழ் இனத்தை கரை சேர்க்கக்கூடிய ஒரே தலைவர் அவர்தான் என்பதாகவும் நினைத்துக்கொண்டு அந்த மனுசனை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருந்தது.
அது ஒரு காலம்.
இப்ப தமிழரசுக் கட்சியின் புதுத்தலைவர் சிறீதரன் சர்வதேச சந்திப்புக்களுக்கு அந்த முந்திரிக்கொட்டையை அழைத்துச் செல்லவதில்லையாம்.
ஒரு புதியவரைத்தான் அழைத்துக்கொண்டு செல்கிறார்.
புகைப்படங்களுக்குத்தான் அவர் புதியவரே தவிர, தமிழரசுக் கட்சிக்குப் பழையவராம். தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்த ஒரு முக்கிய தலைவரின் பேரனாம்.
கட்சி சார்பாக சர்வதேச சந்திப்புக்களை தன்னிச்சையாக நடாத்திக்கொண்டிருந்த அந்த முந்திக்கொட்டையின் முகம், ஊடகங்களில் வெளியாகிவருகின்ற சிறீதரனின் சந்திப்பு புகைப்படங்களைப் பார்த்ததும் வாடி விடுவதாக அவருடன் கூட இருந்த அல்லக்கைகள் இரகசியமாகச் கூறிச்சிரிக்கின்றார்களாம்.