அதிபர் வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் கூட்டம் விரைவில்!
Parliament of Sri Lanka
SLPP
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
By Shalini Balachandran
a year ago
அதிபர் வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான மொட்டுக் கட்சி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இந்த வாரத்துக்குள் ஒன்றுகூடி இது பற்றி ஆராய்வார்கள்.
வேட்பாளர்
இந்தக் கூட்டத்தின் பிரகாரம் எமது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.
மேலும் சவாலை ஏற்கக்கூடிய வெற்றி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்குத் தாம் தயாரில்லை” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்