அரச தலைவர், பிரதமருடன் சந்திப்பு! - கௌதம் அதானி வெளியிட்ட தகவல்
srilanka
President
PrimeMinister-
By MKkamshan
இந்தியாவில் உள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, தனது இலங்கை விஜயத்தின் போது ஏனைய உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, இந்தத் திட்டங்களில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரச தலைவர் மற்றும் பிரதமருடன் எடுத்துக் கொண்ட படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,