தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திய ரணில்
தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டியை வலியுறுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை நோக்கி ஆத்திரத்தை வெளிப்படுத்திய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, பேச விரும்பாவிடின் அனைத்தையும் நிறுத்திவிடலாம் என நிறைவேற்று அதிகார தொனியில் தெரிவித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்புபட்ட விடயங்களை முன்வைத்த போது, அதற்கு இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமது ஆட்சேபனைகளை வெளியிட்ட பின்னணியில் அதிபர் என்ற அதிகார தோரணையில் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.
பிறிதொரு சந்திப்பு

எனினும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் முன்னோக்கி கொண்டு செல்லாம் என தாம் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனினும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழான காவல்துறை அதிகாரங்கள் குறித்து பிறிதொரு சந்திப்பில் கலந்துரையாட முடியும் என அதிபர் கூறியதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.