நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகினார்
Parliament of Sri Lanka
SLPP
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
Uddika Premarathna
By Sathangani
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகியுள்ளார்.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (27) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் சமர்ப்பித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக
2020 ஆம் ஆண்டு தேர்தலில் 133,550 வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உத்திக பிரேமரத்ன, தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், அனுராதபுரத்தில் உள்ள அவரது தந்தையின் இல்லத்திற்கு அருகில் பிரேமரத்னவின் வாகனத்தின் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி