சிறிலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதம் : வெளியானது காரணம்
சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) எலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக விமான சேவைகள் தாமதமானதாக சிறிலங்கன் விமானசேவையின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எலிகள் காணப்பட்ட இரண்டு விமானங்களுக்கு இரசாயனத்தை தெளிக்க வேண்டியிருந்ததனாலேயே விமான சேவைகள் தாமதமானதாக குறிப்பிட்டார்.
நிமல் சிறிபால கேள்வி
அத்துடன் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ஏனைய இரண்டு விமானங்கள் தாமதமாக சேவையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை எலிகள் எப்படி விமானத்திற்குள் புகுந்தன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால, கேள்வி எழுப்பினார்.
இதன்போது 15 ஊழியர்கள் சேவையில் இல்லாததும் காலதாமதத்திற்கு காரணம் என தெரியவந்தது.
அசோக் பத்திரகே தெரிவிப்பு
இந்த நிலையில் மூன்று ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளதுடன் மீதமுள்ள 12 பேர் சாதாரணமாக விடுமுறையை எடுத்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல் விடுமுறையை எடுத்தவர்களை பணிநீக்கம் செய்யுங்கள் என்று கோபமடைந்த நிலையில், அமைச்சர் தெரிவித்தார்.
“சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமாக 20 விமானங்கள் மட்டுமே உள்ளன. அதல் மூன்று விமானங்கள் தரையிறங்கியுள்ளன. இந்நிலையில், நாங்கள் ஐந்து A 330 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளோம், அது விமான சேவைகளுக்கான உலகளாவிய தேவை மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை காரணமாக விமானத்தை கொள்வனவு செய்வது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது” என அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |