யாழ். போராட்டக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Protest
Sri Lanka
Jaffna
By Vasanth
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கப்பெறுகின்றது. அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று போராட்டக் களத்திற்கு வந்து சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசத்தில் மேலும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்றார்.
மேலும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.