யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களது கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் கலந்து கொண்ட கட்சியின் செயற்பாட்டாளர்கள்
இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
போர்ச் சூழலில் இவர் யாழிலிருந்து, துணிவுள்ள ஊடகவியலாளராக பணியாற்றி இருந்தார். இதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.
கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம்
கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டனர்.
இதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



