இரு கைகளிலும் வெட்டுக் காயங்களுடன் நபர் யாழ். போதனாவில் அனுமதி
Jaffna
Jaffna Teaching Hospital
By Thulsi
இரு கைகளிலும் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு கைகளிலும் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட ஒருவர் 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெட்டப்பட்டமைக்கான காரணம்
மேற்படி நபர் 24 ஆம் இலக்க விடுதியின் சத்திர சிகிச்சைக் கூடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் அவரது பெயர் விவரங்கள் ஏதும் பதிவிடப்படவில்லை.
வைத்தியசாலையில் பெயர் விவரங்கள் பதியப்படாதமையால் கைகள் வெட்டப்பட்டமைக்கான காரணம் உடனடியாகக் கண்டறியப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
